Sunday, October 6, 2013

ஆண் பெண் என்ற இரு புள்ளி.....

ஆண் பெண் என்ற இரு புள்ளிகளுக்கு இடையே வரையபட்ட கோடுதான் நாம் வாழும் சமுதாயம் .இதில் ஒரு புள்ளி இல்லாவிடினும் இந்த கோட்டை வரையமுடியாது.

உடல் அமைப்பில் மட்டும்மல்லாமல் உணர்விலும், சிந்தனையிலும் செயலிலும் ஆணும் பெண்ணும் வேறுபட்டே இருக்கிறார்கள். ஆணும் பெண்ணும் இரண்டு துருவங்கள். ஆனால் உடல் தேவைக்காகவும் உணர்வுகளின் தேவைக்காகவும் இரு துருவமும் இணைக்க பட்டிருக்கிறது. தேவைகள் , விருப்பங்கள் இரண்டு பேருக்குமே மாறுபடுகிறது .

இந்த உலகத்தில் வாழ்வதற்க்காக படைக்கப்பட்ட உயிரினங்களில் இருபாலுக்கும் தனிதனியாக சில சலுகைகள் வழங்கபட்டிருக்கிறது .

அது மனித இனத்திர்க்கும் பொருந்தும் அதில் ஓர் உதாரணம் ஆண் உடலளவில் உறுதியாக இருக்கிறான் பெண் மனதளவில் உறுதியாக இருக்கிறாள். பெண் சிறிய பிரச்சனைகளுக்கு கூட அழுது விடுகிறாள் அப்படி இருக்கும்போது பெண் எப்படி மனதளவில்ஆணைவிடஉறுதியானவள் , என சிலருக்கு தோணலாம் அழுவது கூட பெண்ணிற்க்கு இயற்கையாக வழங்கபட்ட ஒரு சலுகை தான். தங்களைபிரச்சனையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் மனஅழுத்ததிலிருந்து விடுபடவும் பெண்களின் மூளை இடும் கட்டளை தான் அழுகை . அழுது முடித்த பின் பிரச்சனையை எப்படி சம்மாளிக்கலாம் என பெண்ணின் மனம் சிந்தித்து தீர்வுகாண்கிறது. அதற்க்கு தீர்வு கிடைக்காவிடில் அதை அத்துடன் மறந்துவிட்டு அடுத்தகட்டம் நோக்கி அவளால் நகரமுடியும்.

பெண்களை போல ஆண்களால் சுலபமாக பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடிவதில்லை என்பது உண்மை . பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாவிட்டாலும் அடுத்தகட்டத்தை நோக்கி எளிதாக நகர முடியாமல் அதை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறான் தீர்வுகிடைக்காததிற்க்கு திரும்ப திரும்ப விடை தேடி கொண்டிருக்கிறான் அதனால் தான் தத்துவஞானிகளும் விஞாணிகளும் அதிகமாக ஆண்களாக இருகிக்றார்கள் என கருதுகிறேன்.

பெண் தோல்விகளை எளிதில் தாங்கிக்கொள்கிறாள். அல்லது தாங்கிக்கொள்ள பழகி இருக்கிறாள். ஆனால் இது ஆண்களுக்கு சிரமமாகாவே இருக்கிறது வாழ்ந்த சூழ்நிலையிலிருந்து புதிய சூழ்நிலைக்கு போகும்போது பெண் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை எளிதில் மாற்றிக் கொள்கிறாள். ஆனால் ஆண்களுக்கு எளிதாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள முடிவதில்லை. ஆனைவிட பெண்ணிற்க்கு உணர்வை வெளிபடுத்தும் மொழித்திறன் அதிகம் அதனால் அவளால் அதிகமாக பேச முடியம் அல்லது அதிகம் பேசுவதை அவள் விரும்புகிறாள்.

மனித இனம் செய்யும் செயல்கள் அனைத்தும் இரண்டு உள் நோக்கத்திலிருந்து உருவாகிறது என உளவியலாளர் சிக்மன்ட் ஃப்ராயிடு கூறுகிறார். முதலாவது நம்முடைய பாலுணர்வு தூண்டுதல், இரண்டாவது முக்கியமனவராக விளங்க வேண்டும் என்னும் மனதின் தூண்டுதல். எதிர் பாலினத்தை ஈர்ப்பதற்காக மனிதஇனம் செய்யும் செயல் நாளடவில் சமுகத்தை நோக்கி திரும்புகிறது. தன்னை இந்த சமுகம் முக்கியமனவராக கருத வேன்டும் என மனம் நினைக்கிறது. அந்த நினைப்பு தான் மனிதனை விஞ்ஞானியாகவும் விளையாட்டு வீரனாகவும் , சினிமா நடிகனாகவும் , தொழில் அதிபர்களாகவும் ஆக்கிறது .

நான்கு பேர் வாழ்கிற வீட்டில் நாற்பது படுக்கை அறைகளை கொண்ட வீட்டை கட்டுவதல்லாம் சமுதாயத்தில் தன்னை முகியமனவராக காட்டிக் கொள்வதற்க்கான செயல்பாடு தான்.

எதிர் பாலின கவர்ச்சி/ ஈர்ப்பு இல்லாமல் பாலியல் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதாக மனித இனம் இருந்திருந்தால் இன்னும் மனித இனம் விலங்குகளை போலதான் வாழ்ந்து கொண்டிருக்கும் . பெண்ணை தன்பால் ஈர்ப்பதற்க்கு ஆண் செய்த செயல்பாடும், ஆணை தன்பால் ஈர்ப்பதற்க்கு பெண் செய்த செயல்பாடும்தான் கற்காலத்தில் வாழ்ந்த மனித இனத்தை கம்ப்யூட்டர் காலத்திற்கு அழைத்து வந்ததும், செயர்க்கை கோளை அனுப்ப வைத்ததும் எல்லம் 

Wednesday, September 25, 2013

சிறு நெருப்பாய் சிரீயா போது....

ஊற்றெடுக்கும் உள்ளக் குமுரல்....... ,
நாற்றங்கலாய் எடுத்து நடாமல்,
தோற்றலும் வரலாறு ஆகும் ....
ஜெய்தாலும் வரலாறு ஆகும்...
கவிதையகும் போது......
 எழுதப்படாத எத்தனையோ உணர்வுகள்
 ஏங்கி தாவிக்கின்றன ...
இருந்தும் ஏனோ எழுத மறுக்கும் மனம்.....
 சொல்லப்படாத எத்தனையோ சூழல்
 பொங்கி தாவிக்கின்றன....
இருந்தும் ஏனோ சொல்லமறுக்கும் குணம்.....
 பல்லக்கில் போனதில்லை,,,,
பாலிய காலம்முதல்....
இருந்தும் வெல்லமல் போனதில்லை.....
 பூமியில் விழுந்த நாள்முதல் ....
 வெற்றிடத்தில் நெருப்பு பிடிக்காது...
 பற்று இல்லாமல் பருப்பும் வேகாதது.....
உணரும் போது உள்ளே தீ பிடித்தது ...
சிறு நெருப்பாய் சிரீயா போது
கற்றேன்னும் காலம் பிடித்து இழுக்க 
முட்சுபிடித்து முயன்று முயன்று
மேலே உயர உயர அதே
 கற்றேன்னும் காலம் பற்றி பரவியது..பாரெங்கும்.......
 புரியாத புதிர் என்று வாழ்வை
 புறமுதுகு காட்டினால் !
அறியாத பத்தர் என்று,
 அப்புறபடுத்த காண்பாய்....
விழித்து இருப்வானுக்ககோ !
 காலம் வழிவிடும் பாலம்....
பயந்துகழித்து இருப்வனுக்கோ !
காலம் அழிந்த கோலம்...
 அனுபவமே படமாய் கொள் ......
அமைதியே தேடலாய் சொல்......

Monday, November 12, 2012

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தை த் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களி ல் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முக த்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவ ரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில் லை. அத்துடன் கோபம் வேறு பொங் கியது… பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார். பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி னான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது… பைத்திய க்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என் று ஆத்திரத்துடன் கேட்டார். அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டு ம் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே…அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந் து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக் காரனை விடுவித்தான். தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென் றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.

தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்"

தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்" தீபாவளி என்றால் தீபம் + வளி ... வளி என்றால் வரிசை என்று பொருள். வரிசையாக தீபங்களை வைத்துக் கொண்டாடப்படுகிற பண்டிகையாக இருந்ததால் தீபாவளி என்ற காரணப் பெயராக நிலைத்துவிட்டது! தீமையை விலக்கும் உண்மையாகவும், இருளை விலக்கும் ஒளியாகவும் இந்த விழாவைச் சொல்கிறோம். இந்தியத் தத்துவ மரபில் ஒளி என்பது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. எனவே தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள் மனிதனுக்கு ஞானத்தைக் கொண்டு வருவதாக ஐதீகம். பஞ்சாங்கங்களில் தீபாவளியன்று காலையில் "சந்திர தரிசனம் " என்றோ சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம் என்றோ காணப்படும். சந்திர தரிசனம் "சந்திர தரிசனம்" என்றால் என்ன? ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும். இது கிழக்கில் அடிவானத்தில் தெரியும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்கவேண்டும். இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆகையால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை "கங்காஸ்நானம்" என்று கூறுகிறார்கள். கதை, கதைகள் தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நம் நாட்டில் ஏராளமான கதைகள் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கதையை தங்கள் பேரக் குழந்தைகளுக்கு பாட்டிகள் சொல்லி வருகிறார்கள். நம் ஊரில் தாத்தா, பாட்டிகள் சொல்லும் ஜெனரல் கதை 'நரகாசுர வதம்'. பூமாதேவியோட மகன்தான் நரகாசுரன்! நரகாசுரன் பிரம்மாகிட்ட ஒரு வரம் வாங்கினான். தன்னோட தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாதுன்னு பிரம்மனிடம் வரம் வாங்கியிருந்தான். வரத்தை வாங்கீட்டோம்ங்கிற தைரியத்துல அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களை பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். எப்படிப்பட்ட தொல்லைன்னா ராத்திரியில யாரும் வீட்டுல வெளக்கேத்தக் கூடாதுன்னு உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்சவிளக்குகளை வீட்டில் வைத்தவர்களின் தலைகளைக் கொய்தான். நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், பகவான் கிருஷ்ணரிடம் முறையிட்டனர். கிருஷ்ணரும் நரகாசுரனை அழிக்கிறேன் என்று சொல்லி மக்களுக்கு ஆறுதல் சொன்னார். பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை எதிர்த்துச் சண்டை போடுறதுன்னு முடிவு செஞ்சார் பகவான் கிருஷ்ணர். சண்டை ஆரம்பிச்சுச்சு. போர் நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பால் கிருஷ்ணர் மயக்கமடையிற நிலைக்கு ஆளாயிட்டார். இதனால் கோபமான சத்தியபாமா, நரகாசுரனோட சண்டை போட்டு அவனை வெட்டி வீழ்த்தினாங்க. நரகாசுரன் சாகிறதுக்கு முன்னாடி தன் தாயிடம் ஒரு விண்ணப்பம் செஞ்சான். எனக்குச் சாவு வரதுக்கு காரணம், நான் எல்லோரையும் வெளக்கேத்தக் கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால நான் இறக்கிற இந்த நாளை மக்கள் வெளக்கேத்தி சந்தாஷமாக் கொண்டாட நீங்கதான் ஏற்பாடு செய்யணும்ன்னு கேட்டான். பூமாதேவி நரகாசுரனின் கோரிக்கையை நிறைவேத்துறதா ஒத்துக்கிட்டாங்க. அதனால நரகாசுரன் என்ற அந்தக் கொடிய அரக்கன் இறந்து ஒழிந்த அந் நாளை தீபங்கள் ஏற்றி வெளிச்சத் திருவிழாவாக.... தீபத்திருவிழாவாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. வட நாட்டில்.. ஆனால், வட நாட்டிலோ, 14 ஆண்டுகள் வன வாசத்திலிருந்து ராமரும், சீதையும் நாடு திரும்பும் நாள் தான் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர். வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள். ராமர்சீதா தேவியை வரவேற்க இந்த விளக்குகள் என்பது ஐதீகம். மேலும் தீபாவளியை பொதுவாக ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஐந்து நாட்களிலும் விரதமும் இருக்கிறார்கள். குஜராத்திலோ, லட்சுமி பூஜையாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். பொன்னும், பொருளும் கொழிக்க வேண்டும் என்று லட்சுமியை வேண்டி நடத்தப்படும் பூஜை தான் தீபாவளி என்கிறார்கள் மார்வாரி சமூக மக்கள். சீக்கியர்களின் தீபாவளி சீக்கியர்கள் தீபாவளி கொண்டாடுகிற..... தீபாவளிக்கு சொல்கிற காரணம் வேற. சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான குரு கோவிந்த சிங் குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுபட்ட நாளைத்தான் தீபாவளியாகக் கொண்டாடுவதாச் சொல்கிறார்கள். அரக்கன் ராவணனை, ராமன் அழித்தொழித்த நாள்தான் தீபாவளி என்று சொல்வாரும் உண்டு. மகாவிஷ்ணு நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்து உலகத்தில் உண்மையை நிலை நாட்டிய நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்போரும் உண்டு ! சிங்கப்பூர் செய்த சிறப்பு துர்கா தேவி மகிசாசுரனை வதம் செய்தழித்த நன்னாளே தீபாவளித் திருநாள் என்று சொல்வதும் உண்டு. சொல்லப்படுகிற அனைத்துக் கதைகளிலும் உள்ள ஒரே ஒற்றுமை விஷ்ணுவின் அவதாரம் இருப்பதுதான் ! தீபாவளிப் பண்டிகையின் பிறப்பிடமான இந்தியாவில் அதற்கு செய்யாத சிறப்பை சிங்கப்பூர் செய்திருக்கிறது. ஆம்! தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்துத் தபால் தலை வெளியிட்ட நாடு சிங்கப்பூர் மட்டும்தான்.

Monday, April 16, 2012

சிவபுராணம்

1. சிவபுராணம்
(திருப்பெருந்துறையில் அருளியது
தற்சிறப்புப் பாயிரம்)

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்

Sunday, September 11, 2011

'ஒரு மனிதனின் கதை' சிவசங்கரி

நேற்று காலை வானொலி ஒன்றில் சிவசங்கரி அவர்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்,
எழுத்தாளர் சிவசங்கரியை நினைத்தவுடனே பலரது நினைவுக்கு வருவது அவரது 'ஒரு மனிதனின் கதை' நாவல் தான். கதையின் நாயகன் தியாகுவும், நாயகி கங்காவும் மறக்கமுடியாத பாத்திரப்படைப்புகள். குடிப்பழக்கம் ஒரு மனிதனை எந்த அளவுக்கு சீர்குலைக்கும் என்பதை அத்தியாயத்திற்கு அத்தியாயம் மனத்தில் தைக்கிறமாதிரி அழகாகச் சொல்லியிருப்பார் சிவசங்கரி. 'ஒரு மனிதனின் கதை'யைப் படித்து விட்டுப்போதைப் பழக்கத்திலிருந்து விலகியோடிப் போனவர்கள் நிறையப் பேர். இதுதான் சிவசங்கரியின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.

இந்தக்கதை பிரசுரமான 'ஆனந்தவிகடன்' கூட இந்தக் கதை வெளிவந்த நேரத்து, தனது பத்திரிக்கைக்கான கொள்கை முடிவொன்றை எடுத்தது; இனி மது, சிகரெட் விளம்பரங்களை ஏற்பதில்லையென்று. 'ஒரு மனிதனின் கதை' பிரசுரமாகி ஆண்டுகள் பலவாகியும் 'ஆனந்தவிக்டன்' பத்திரிகை பல வருடங்களுக்கு முன்பு தான் எடுத்த முடிவில் வழுவாமல் இன்றும் அந்தக் கொள்கையைக் கடைபிடித்து வருகிறது என்பது பத்திரிகை உலகில் அரிதாகப் பார்க்கக்கூடிய ஒரு விஷயம். இதில் ஒரு சுவையான செய்தி என்னவென்றால், "ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்" சங்கத்தின் விளம்பரம்
ஒன்றை 'இந்து' பத்திரிகையில் படித்ததின் பின்னால் தான், 'ஒரு மனிதனின் கதை' உள்ளத்தில் உருவானதாக சிவசங்கரி ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

கருணைக்கொலை, மலையின் அடுத்த பக்கம், இனி, மூன்று தலைமுறை நிகழ்ச்சிகளைச் சொல்லும் 'பாலங்கள்', நான்நானாக, தவம், நப்பாசை,அவள், அப்பா என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய புதினங்களைப் படைத்துள்ளார் சிவசங்கரி. அடுக்களைகளிலும், குடும்ப உறவுகளிலும் புதைந்து போன பெண்களின் மெலிதான உணர்வுகளை மீட்டெடுத்து, தனது புதினங்களில் ஆவேசமாகச் சொன்ன சிலருள், பெருமைக்குரியவர் சிவசங்கரி இவரது படைப்பான 'ஒரு சிங்கம் முயலாகிறது'--'அவன் -அவள்-அது' என்ற திரைப்படமானது. பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த '47 நாட்கள்' திரைப்படம், சிவசங்கரியின் மறக்கமுடியாத கதை தான். சமூகத்தின் சில கோணலான நடவடிக்கைகளால், நேரடியாகத் தாக்குறும் பெண்குலத்தின் வேதனையை மிக அழகாக படம் பிடித்துக்காட்டும் வேகம சிவசங்கரியின் எழுத்துக்களில் உண்டு.

'திரிவேணி சங்கமம்' அனுராதாவும், 'ஒரு சிங்கம் முயலாகிறது' லாவண்யாவும், 'நெருஞ்சிமுள்' பூமாவும், 'கருணைக்கொலை' ஜனனியும், 'மெள்ள மெள்ள'அகிலாவும், 'கப்பல் பறவை' சுஜாவும் அந்தந்த நாவலை நினைக்கையிலேயே தங்கள் தங்கள் தனித்தன்மையுடன் நினைவில் நிற்கிறார்கள்.

முப்பதுக்கு மேற்பட்ட நாவல்களையும், ஏகப்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ள சிவசங்கரி, இலக்கிய ஆர்வலர்கள் பாரதி-லட்சுமணன் அமைப்பான 'இலக்கிய சிந்தனை' பரிசு பெற்றவர். அவிஸ்திகா (Awsthitha) என்னும் கலைக்கான விருது பெற்றவர். 'ஒரு மனிதனின் கதை' தொலைக்காட்சித் தொடராகவும் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது.

'இளமையில் எழுத வேண்டும் என்கிற எண்ணமோ, தான் ஒரு எழுத்தாளராக ஆவோம் என்கிற கற்பனையோ மனதில் கிஞ்சித்தும் எனக்கு இருந்ததில்லை'என்று சிவசங்கரி சொன்னதாக எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.

படைப்பிலக்கியத்தில் எந்தப் பயிற்சியும் பெறாத இவர் எழுதிக் குவித்தவைதான் ஐம்பதுக்கும் மேற்பட்டப் புதினங்கள்; அத்தனையும் வார, மாத இதழ்களின் பகாசுரப்பசிக்குத் தீனிபோடுபவையாக இருந்தாலும் இவர் உள்ளத்தில் பதிந்த சில பரிதாப உணர்வுகளும், ஜீவகாருண்ய சிந்தனையும், போதைவஸ்துகள் மனிதகுலத்தை சீரழித்து வேட்டையாடும் அவலமும், அதிலிருந்து அதை மீட்க வேண்டிய அவசியமும், பெண்ணினம் ஏமாளிகளாகப் பட்டிருக்கும் சூதை உரத்தகுரலில் பிரகடனம் பண்ணும் வேகமும் இவர் எழுத்துக்களில் இயல்பாகப் படிந்துள்ள பாங்கை மறுக்கமுடியாது.

இந்த உணர்வுகள் தாம் இவரது பிற்கால எழுத்துக்களைத் தீர்மானித்திருக்கின்றன. இந்த இடத்தில் தான், கதைகளைத் தவிர்த்து கருத்துப் பிரசாரத்தைப் பலமாகச் செய்தலும், சமுதாய விழிப்புணர்வைத் தூண்டிவிடும் கட்டுரைகளை எழுதுதலும், ஊனமுற்றோர், முதியோர், மனவளர்ச்சி குன்றியோர் ஆகியோரை ஊக்குவிக்கும் செயலையும் இவரிடம் பார்க்க முடிகிறது. வெறும் கதைகளை மட்டும் எழுதுவதோடு என் வேலை முடிந்தது என்று கடையைக் கட்டாமல்,மிகுந்த பொறுப்புணர்வுடன் நேரடியாகக்களத்தில் இவர் இறங்கியதையும் பாராட்டத்தான் வேண்டும். பாரதப் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி,அன்னை தெரஸா அகியோரைப் பேட்டி கண்டு இவர் எழுதிய தொடர்கட்டுரைகள் அடிக்கோடிட்டுச் சொல்லவேண்டிய அளவிற்கு அற்புதமானவை.

எம்.ஏ.சி. அறக்கட்டளை நிறுவனப் பரிசைப்பெற்ற இவரது 'சின்ன நூற்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?' தற்சாற்பு கட்டுரைத் தொடரையும், "அக்னி" (Awakened Groups for National Integration) அமைப்பை இவர் நிறுவியதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டுச் சிந்தனையை வளப்படுத்தும் செயலாய், அந்த முயற்சிக்கு முன்னோடியாய் பல்வேறு இந்திய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, ஆகச்சிறந்த இலக்கிய படைப்பாளிகளைச் சந்தித்து, அவர்களது சமூக, இலக்கிய கருத்துக்களைப் பதிவுசெய்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற அற்புதமான நூலை பல்வேறு நடைமுறை சிரமங்களுக்கிடையே எழுதி ஆவணமாக்கிய சிவசங்கரியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Wednesday, August 17, 2011

விவேக சிந்தாமணி

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே.

**

தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே

**

அரவினை ஆட்டுவாரும் அரும் களிறு ஊட்டுவாரும்
இரவினில் தனிப்போவாரும் ஏரிநீர் நீந்துவாரும்
விரைசெறி குழலியான வேசையை விரும்புவாரும்
அரசனைப் பகைத்திட்டாரும் ஆருயிர் இழப்பார் தாமே.