ஜென் மாஸ்டர்

மிகவும் முரட்டு குணமிக்க மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு ஜென் மாஸ்டர் தனது சிஷ்யர்களுடன் வந்தார். அக்கிராம மக்கள் அவரை மிகவும் அவ மரியாதையாக நடத்தினார்கள். ஜென் மாஸ்டர் காது படவே அவரை திட்டினார்கள். ஜென் மாஸ்டர் அனைத்து துன்பங்களையும் பொறுமையாக சகித்து கொண்டார்.
கடைசியில் அந்த ஊரைவிட்டு கிளம் பும்போது அந்த கிராமமும், கிராம மக்களும் எந்த பாதிப்புமின்றி நீடூழி வாழ வாழ்த்தினார். அடுத்து பக்கத்து கிராமத்திற்கு சென்றார். பக்கத்து கிராம மக்கள் மிகவும் அன்பானவர்களாகவும் மரியாதை நிறைந்தவர்களாகவும் இருந்தனர்.
ஜென் மாஸ்டரை மிகவும் அன்பாக உபசரித்தனர். அங்கிருந்து கிளம்பும்போது இக்கிராமும், மக்களும் பல்வேறு கூறுகளாக பிரிந்து செல்ல வேண்டும். இக்கிராமமே இல்லாமல் போக பேண்டும் என சபிப்பது போல் கூறினார் மாஸ்டர். சிஷ்யர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. "அவமரியாதை செய்தவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்றும், அன்பாக இருந்தவர்கள் கலைந்துபோக வேண்டும் என்றும் சொல்கிறீர்களே ஏன்?" என்று சிஷ்யன் ஒருவன் மாஸ்டரிடம் கேட்டான்.
"பண்பில்லாத முதல் கிராம மக்கள் உலகின் மற்ற பகுதிகளுக்கு சென்றால் தங்களது தவறான பழக்கங்களை மற்ற மக்களுக்கும் கற்றுத்தந்து விடுவார்கள். ஆனால் இரண்டாவதாக நாம் பார்த்த கிராம மக்கள் பண்பில் சிறந்தவர்கள். இவர்களின் நற்குணங்கள் உலகம் முழுவதும் பரவ வேண்டும். அவர்கள் பிரிந்து துன்பம் அடைந்தாலும் அவர்களால் மனித குளம் நன்மை அடையும் எனவேதான் அவர்கள் பிரிய வேண்டும் என்றேன்" என்றார் மாஸ்டர். சிஷ்யன், மாஸ்டரின் மாண்பை நினைத்து பெருமைப்பட்டான்.
நீதி: நல்லவர்கள் துன்பம் அடைந்தாலும், அவர்களால் உலகிற்கு நன்மையே உண்டாகும். .

Comments