வேலை வாங்குவதுதான் எங்கள் வேலை

வேலை வாங்குவதுதான் எங்கள் வேலை ஒரு சாலையில் நிறைய மரங்கள் விழுந்து கிடந்தன. அவற்றை தொழிலாளிகள் மிகவும் கஷ்டப்பட்டு அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இரண்டு குதிரை விரர்கள் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தர்கள்.
அப்போது அந்த்ப் பக்கமாய் குதிரையில் ஒருவர் வந்தார். தொழிலாளிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.
"ரொம்பச் சிரமபடுகிறார்களே நீங்களும் இறங்கி உதவலாமே?" - குதிரை வீரர்களைப் பார்த்துக் கேட்டார். குதிரை விரர்கள் அவரை அலட்சியமாகப் பார்த்தார்கள். நாங்கள் ராணுவ அதிகாரிகள். இவர்களை வேலை வாங்குவதுதான் எங்கள் வேலை" என்று பதிலளித்தார்கள்.
குதிரையில் வந்தவர் எதுவும் பேசவில்லை. குதிரையிலிருந்து இறங்கி தொழிலாளிகளுடன் சேர்ந்து மரங்களை அப்புறப்படுத்தினார். அங்கிருந்து கிளம்பும்போது, "அடுத்த முறை இது போன்று உதவி எதாவது தேவைப்பட்டால், உங்கள் தளபதிக்குச் சொல்லியனுப்புங்கள்" என்று தன் தொப்பியைக் கழற்றினார். அப்போது தான் வீரர்களுக்கு அவரை அடையாளம் தெரிந்தது. அவர், அவர்களின் தளபதி ஜார்ஜ் வாஷிங்டன். அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி.
நீதி: மற்றவர்களுக்கு உதவி செய்பவனே மனிதன்.

Comments