இடம் பிடியுங்கள்
முத்துக்குமாரின் கவிதை
இடிபாடுகள் புதுப்பித்து
கட்டிடம் கட்டி
ஆவிகள் ஊளையிடும் நகரில்
மனிதர்களை குடியேற்ற அல்ல
பேச்சு;
பயம் உறைந்த
ரத்தமாய்
உடல்கள்;
எழுந்தது பார் நவ சகாப்தம்!
பெரு வயிறு, பெருந்தீனி, பிணந்தின்னி
வியாபாரியின் பேச்சில்
மறைகிறது
இடுபாடுகளுக்கடியில்
கைத்தட்டி கால்பந்து ரசித்து,
ஒயின் குடிக்கும் குடும்பம்;
உன்னத வாழ்வு,
சீரமைந்த வாழ்வு குறித்து
பிழைத்தவர்க்ள் யோசிக்க
இறந்த சதைகள் என்னவோ கோபுரங்களாய்
குவிகிறது மறு உலகம் நோக்கி.
முதல் ஆட்டம் என்று துவங்கி
இறுதி ஆட்டம் ஆடும் பேயரசுகாள்!
இப்போதே பிடியுங்கள்
உங்கள் இடத்தை இடுகாட்டில்.
இடிபாடுகள் புதுப்பித்து
கட்டிடம் கட்டி
ஆவிகள் ஊளையிடும் நகரில்
மனிதர்களை குடியேற்ற அல்ல
பேச்சு;
பயம் உறைந்த
ரத்தமாய்
உடல்கள்;
எழுந்தது பார் நவ சகாப்தம்!
பெரு வயிறு, பெருந்தீனி, பிணந்தின்னி
வியாபாரியின் பேச்சில்
மறைகிறது
இடுபாடுகளுக்கடியில்
கைத்தட்டி கால்பந்து ரசித்து,
ஒயின் குடிக்கும் குடும்பம்;
உன்னத வாழ்வு,
சீரமைந்த வாழ்வு குறித்து
பிழைத்தவர்க்ள் யோசிக்க
இறந்த சதைகள் என்னவோ கோபுரங்களாய்
குவிகிறது மறு உலகம் நோக்கி.
முதல் ஆட்டம் என்று துவங்கி
இறுதி ஆட்டம் ஆடும் பேயரசுகாள்!
இப்போதே பிடியுங்கள்
உங்கள் இடத்தை இடுகாட்டில்.
Comments