vairamuthu sir kavithai

This is one of the nice poem of vairamuthu I found in a website.Let me share this poem with u ...
He is the only person who inspired me lot and turned on my side to tamil poems...





வாழ்க்கை பூட்டியே கிடக்கிறதுசிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்அது திறந்து கொள்கிறதுவாழ்வின்மீது இயற்கை தெளித்தவாசனைத் தைலம் சிரிப்புஎந்த உதடும் பேசத் தெரிந்தசர்வதேச மொழி சிரிப்புஉதடுகளின் தொழில்கள் ஆறுசிரித்தல் முத்தமிடல் உண்ணால் உறிஞ்சல்உச்சரித்தல் இசைத்தல்சிரிக்காத உதட்டுக்குப் பிற்சொன்ன ஐந்தும்இருந்தென்ன? தொலைந்தென்ன?தருவோன் பெறுவோன்இருவர்க்கும் இழப்பில்லாதஅதிசய தானம்தானே சிரிப்புசிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியேதுன்பம் வெளியேறிவிடுகிறதுஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்இருதயம்ஒட்டடையடிக்கப்படுகிறதுசிரித்துச் சிந்தும் கண்ணீரில் உப்புச் சுவை தெரிவதில்லை * * * * * முள்ளும் இதுவேரோஜாவும் இதுவேசிரிப்புஇடம்மாறிய முரண்பாடுகளேஇதிகாசங்கள்ஒருத்திசிரிக்கக்கூடாத இடத்தில்சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம்ஒருத்திசிரிக்க வேண்டிய இடத்தில்சிரிப்பைத் தொலைத்தாள்அதுதான் ராமாயணம்எந்தச் சிரிப்பும்மோசமாதில்லைபாம்பின் படம்கூடஅழகுதானே?சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்மரணம் உட்கார்வதேயில்லைபகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்மரணம்ஒவ்வொரு சாயங்காலமும்படுக்கைதட்டிப் போடுகிறதுஒருபள்ளத்தாக்கு முழுக்கப் பூப் பூக்கட்டுமேஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?





காதலின் முன்னுரைகடனுக்கு மூலதனம்உதடுகளின் சந்திரோதயம்விலங்கைக் கழித்த மனிதமிச்சம்சிரிப்பை இவ்வாறெல்லாம்சிலாகித்தாலும் மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள்உண்டா இல்லையா?சிரியுங்கள் மனிதர்களே!பூக்களால் சிரிக்கத் தெரியாதசெடிகொடிகளுக்குவண்டுகளின் வாடிக்கை இல்லைசிரிக்கத் தெரியாதோர் கண்டுசிரிக்கத் தோன்றுமெனக்குஇவர்கள் பிறக்கஇந்திரியம் விழவேண்டியவிடத்தில்கண்ணீர் விழுந்துற்றதோவென்றுகவலையேறுவேன்சற்றே உற்றுக் கவனியுங்கள்சிரிப்பில் எத்தனை ஐ¡தி?கீறல்விழுந்த இசைத்தட்டாய்ஒரே இடத்தில் சுற்றும்உற்சாகக் சிரிப்புதண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்புதலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச் சென்§¡றடித் தேய்ந்தழியும் சிரிப்புகண்ணுக்குத் தெரியாதசுவர்க்கோழி போலஉதடு பிரியாமல்ஓசையிடும் சிரிப்புசிரிப்பை இப்படிசப்த அடிப்படையில் ஐ¡தி பிரிக்கலாம்சில உயர்ந்த பெண்களின் சிரிப்பில்ஓசையே எழுவதில்லைநிலவின் கிரணம்நிலத்தில் விழுந்தால்சத்தமேது சத்தம்?சிறுசிறு சொர்க்கம் சிரிப்புஜீவ அடையாளம் சிரிப்புஒவ்வொரு சிரிப்பிலும்ஒருசில மில்லிமீட்டர்உயிர்நீளக் கூடும்மரணத்தைத் தள்ளிப்போடும்மார்க்கம்தான் சிரிப்புஎங்கே!இரண்டுபேர் சந்தித்தால்தயவுசெய்து மரணத்தைத் தள்ளிப் போடுங்களேன்!

Comments