Sunday, December 21, 2008

மரபின் எச்சம்

கவிஞர் ச.விசயலட்சுமி தமிழாசிரியராக பணிபுரிந்து வருபவர். முரண்களரி அமைப்பாளர்களில் ஒருவர். "பெருவெளிப்பெண்" கவிதைத் தொகுதி இவரது முதல் தொகுதி.

மரபின் எச்சம்

நீ சிரிக்கும்போது
நானும் சிரித்தேன்

நான் அழுகையில்
நீயும் அழுதாய்

அவரவராகவே
சுயமாயிருக்கிறோம்

இருள் கவியும் மாலை...
நனைக்கவரும் அலையில்
நனையாமல் காக்க
தொட்டுத் தூக்கியதும்
என் மனத்தில் முடை நாற்றம்
உடல் குறுகினேன்

மரபின் எச்சம்
இன்னும் என்னுள்

0 comments: